பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு இல்லை.!
“மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நாம் எதிர்க்கவில்லை” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 750 ரூபாய் நாள் சம்பளம் வழங்குவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை. எமது உறுப்பினர்களும் எதிர்க்கவில்லை. இதனைப் பொறுப்புடனேயே கூறுகின்றேன்.
ஆயிரத்து 750 ரூபாவுடன் நின்றுவிடாது, தரிசு நிலங்களையும் அவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அம்மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயிரத்து 750 ரூபா வழங்குவது நல்ல விடயம். அதேபோல் காணியும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.