உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பௌத்தத்தை பாதுகாப்பது ஆட்சியாளர்களின் கடமை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
36 பார்வைகள்

“நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர். அந்நியர் ஆட்சியின் போது கூட பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனவே, தற்போதைய ஆட்சியாளர்கள் இந்தப் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியாது.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடங்களிடம் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

1931ஆம் ஆண்டின் பௌத்த விகாரைகள் மற்றும் ஆலயங்கள் (நன்கொடை) கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, விகாரைகளுக்குச் சொந்தமான சொத்துகள் விகாரைகளுக்கே உரியவை.

நாம் தானமாக வழங்கும் அனைத்து தங்கப் பொருட்களும் ஆலயங்களுக்கு அல்லது விகாரைகளுக்கே சொந்தமானவை.

யாராவது இவற்றில் தலையிட முயன்றால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

1815ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் பௌத்தத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஒவ்வோர் அரசியல் கட்சியும் இதனை முன்னோக்கி எடுத்துச் சென்று, மகா சங்கத்தினருடன் இணைந்து அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

53 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

26 0 0