உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

விடுதலைப் புலிகள் தொடர்பில் மறக்கப்பட்டிருந்த விடயத்தை ஞாபகப்படுத்திய நாமல்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நாங்கள் யுத்தம் செய்தது தமிழீழ விதலைப் புலிகளுக்கு எதிராகவே தவிர தமிழ் மக்களுக்கு எதிராகவல்ல.அது மறக்கப்பட்டிருந்தால் ஞாபகப்படுத்தி கொள்ளவும் என நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

டித்வா சூறாவளி தொடர்பான விசேட குழு நியமிப்பதற்கான விவாதத்தில் உரையாற்றும் போதே இன்று (21.01.2026) இதனை தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய அவர்,இவர்கள் ஒரு பக்கம் பௌத்த பிக்குகளை விமர்சிப்பதோடு எங்கையாவது புத்தர் சிலை வைக்கப்பட்டு விகாரை அமைத்தால் அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் நாகதீப விகாரைக்கு சென்று ‘சில்’ எடுத்தால் அது இனவாதம் என ஜனாதிபதி சொல்கிறார். தமிழ் மக்களுக்கு கதிர்காமத்துக்கு செல்வதற்கான சுதந்திரம் இருப்பது போல சிங்கள மக்களும் நாகதீப விகாரைக்கு செல்கின்றனர்.

அத்தோடு கத்தோலிக்க மக்கள் மடுதேவாலயத்திற்கு செல்லவும் முடியும்.அரச தரப்பு எதிர்க்கட்சியில் இருக்கும் போது இருந்த மனநிலையில் பார்க்க வேண்டாம. இன்று அதெல்லாம் மாறிவிட்டது.76 வருட சாபங்கள் தொடர்பில் பேசி கொண்டிருக்காமல் 77 ஆவது வருடத்தில் வந்திருக்கும் அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த அரசாங்கம் அண்மையில் ஏற்பட்ட தாழமுக்கத்தில் சூறாவளி வருவதாக ஒவ்வொரு மணித்தியாலங்களும் எஸ்.எம்.எஸ் அனுப்பினர்.ஏன் டித்வா தொடர்பில் இவ்வாறு செயற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

52 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0