உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஜனாதிபதி கல்வி மறுசீரமைப்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

“கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

தற்போதுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, தேசிய கல்வி நிறுவகத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பின் மூலம், கல்வி மறுசீரமைப்புகளை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்களை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இங்கு எடுத்துக்காட்டினர்.

புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கான தேவையை தமது சங்கம் ஏற்றுக்கொள்வதாகவும், நகர்ப்புற பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளை விட கிராமப்புற பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புகள் தேவைப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கல்விச் மறுசீரமைப்புகளில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி தலைமையிலான அரசு எடுத்த முடிவைப் பாராட்டுவதாகவும், அதற்காக தமது ஆதரவுகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக, பல்கலைக்கழக கட்டமைப்பில் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் உள்ளிட்ட பரிந்துரைகளும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன.

பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் கல்வியைப் பாதுகாக்க அரசு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.பல்கலைக்கழக சட்டத்தின் திருத்தம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

52 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0