உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சமூக சீரழிவின் மையமாக உருவெடுக்கும் மண்டைதீவு சுற்றுலாத்தளம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூகவிரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (21) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்த “எக்கோ ரூறிசம்” குறித்து பல்வேறு பிரச்சினைகள சபையில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வேலணையில் அபிவிருத்தியையும், சுற்றுலா வலயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுலாவிகளுக்காக சுமார் 77 மில்லியன் செலவில் சுற்றுலா அமைச்சினால் 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இந்த மண்டைதீவு சுற்றுலாத்தளமாகும்.

ஆனால் அது முறையற்ற பொறிமுறையாலும் சரியான பராமரிப்பின்மையாலும் சபைக்கான வருமானம் இழக்கப்பட்டுள்ளதுடன் எதிர்பார்த்த இலக்கை எட்டாது திட்டமும் முழுமையாகத் தோற்றுவிட்டது.

கொள்வனவு செய்யப்பட்ட படகுகள், அதுசார் இயந்திர உபகரணங்கள் அனைத்தும் உரிய பராமரிப்பின்றி முழுமையாக சேதமாகிக் கிடக்கின்றது.

மாறாக பல உபகரணங்கள் சூரையாடப்பட்டுள்ளதுடன், அது இன்று மதுபோதை அருந்தும் திடலாகவும் சமூக சீரழிவுக்கான களமாகவும் உருவாக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக வேலணைக்கு வெளி இடங்களிலிருந்து சுற்றுலாவாக அல்லாது சமூக சீர்கேட்டை மையமாகக் கொண்டே அதிகமானோர் இங்கு வருவதாக பலரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இதனால் எமது பிரதேசத்தின் மாண்பு பாதிக்கப்படுவதுடன், பிரதேசத்தின் நற்பெயருக்கும் இழுக்கு ஏற்படுகின்றது.

இவ்வாறு உருவாகிவரும் இந்த நிலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கான தார்மீக பொறுப்பு வேலணை பிரதேச சபைக்கே இருக்கின்றது.

எனவே சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையத்தை தற்போது வர்த்தக நோக்குடன் பராமரித்து முன்னெடுக்கும் தனியாரிடமும் இவ்விடயம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதுடன் இழந்த வருமானத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

52 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0