உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

துறைநீலாவணை பகுதியில் வீதியில் குப்பைகளை கொட்ட முயன்ற இரு நபர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீதிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்ட முற்பட்ட நபர்களை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினரினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணைப்பகுதியில் கடந்த காலங்களில் வீதிகளில் குப்பைகளை கொட்டிச்செல்லும் நிலை அதிகரித்துக்காணப்பட்டது.

குறிப்பாக இரவு வேளைகளில் வாகனங்களில் வந்து துறைநீலாவணை பிரதான வீதியில் குப்பைகளை கொட்டிச்செல்லும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த நிலையில் இது தொடர்பில் துறைநீலாவனை பிரதேச மக்களினால் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பிரதேசசபையில் முன்வைக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் துறைநீலாவனை பிரதேச மக்களும் துறைநீலாவளை வட்டார பிரதேசசபை உறுப்பினர் இளமாறனும் தொடர்ச்சியான அவதானிப்பில் ஈடுபட்டுவந்த நிலையில் நேற்று இரவு வட்டா ரக வாகனத்தில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதை அவதானித்த நிலையில்அவர்களை மடக்கப்பிடித்துள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் ரவிகரனுக்கு; மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜுக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த தவிசாளர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறித்த பட்டா வண்டியை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.

இதன்போது பிடிக்கப்பட்ட இரு நபர்களையும் கைப்பற்றப்பட்ட வாகனத்தினையும் வழக்கு தாக்கல் செய்வதற்காக களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் தெரிவித்தார்.துறைநீலாவணைக்கு செல்லும் பிரதான வீதியில் தொடர்ச்சியாக கொட்டப்படும் கழிவுகளினால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதுடன் அருகிலுள்ள வயல்களும் நீர்நிலைகளும் பாதிக்கப்படும் நிலைமைகளும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

52 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0