பொங்கல் விழாவும் குருதிக்கொடை நிகழ்வும்.!
உழைப்பின் கண்ணியத்திற்கும் இயற்கையிடமிருந்து கிடைத்த பாதுகாப்பிற்கும் நன்றியை வெளிப்படுத்தும் ஒரு உன்னத கலாச்சார பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில், தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்துக்குற்பட்ட கண்டங்களில் உள்ள விவசாய அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
வாழைச்சேனை கமநல பிரிவுக்குட்பட்ட விவசாய அமைப்புக்களும் கமநல அபிவிருத்தி குழுவும் இணைந்து நடத்தும் இரத்ததான நிகழ்வு, பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு, கௌரவிப்பு நிகழ்வுகள் இன்று (20) கமநல நிலையத்தில் இடம்பெற்றது.
மூன்று இன மக்களுக்கு சேவையினை மேற்கொள்ளும் கமநல நிலையத்தின் சர்வமத மதகுருமாரின் பங்குபற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன. கடந்த புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கமநல சேவை நிலையத்தில் கடமையற்றும் உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும் மாணவர்களின் நடனம் அதிதிகள் உரை என்பன இடம்பெற்றதுடன்
வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டதுடன் விவசாய செய்கையின் போது மரணித்த குடும்பத்துக்கு வழ்வாதார உதவியும் வழங்கப்பட்டது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயக்காந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கி.ஜெகன்நாத், மாவட்ட நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் எம்.ஜ. எம்.இப்ராகிம், ஏனைய கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.



