உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மன்னார் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த சூரியப் பொங்கலும் உழவர் கௌரவிப்பும்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மன்னார் மாவட்ட செயலக அலுவலர்கள் ஏற்பாடு செய்த தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான சூரியப் பொங்கலும் உழவர் கௌரவிப்பும் இன்று திங்கட்கிழமை (19) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அரசாங்க அதிபர் மற்றும் அலுவலர்கள் இணைந்து பொங்கல் பெங்கினர்.

அதனை தொடர்ந்து நடன நிகழ்வுகள் அரங்கேறியது. தொடர்ந்து உழவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை மதிக்கும் வகையில் உழவர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து ஒருவர் வீதம் 5 உழவர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனைகளை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0