உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் 7ஆம் ஆண்டு நிறைவு விழா..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழா அதன் தலைவர் சிவலிங்கம் சிறிகலாதான் தலைமையில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் அதன் தலைமை காரியாலயமான பொற்பதி குடத்தனையில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கபட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கல சுடர்களை
ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி. வேந்தன், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ. சுரேஷ்குமார், மக்கள் நலன்புரி சங்க இயக்குனர் S.k.சந்துரு, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆகஸ்ரின், திருமதி சுரேஷ்குமார், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகாந்தன் ஜெயகோபி, உட்பட பலரும் ஏற்றினர்.

தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்றதனை தொடர்ந்து கற்கோவளம் முன்பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து தலைமையுரையினை பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் சிவலிங்கம் சிறிகலாதன் நிகழ்தினார்.

அதனை தொடர்ந்து விஜய் டிவி யூனியர் பாடல் போட்டிக்கு தெரிவாகிய கற்கோவளம் சிறுமி அனுஷ்காவின் பாடல்கள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து கல்வி சாதனையாளர்களான செல்வன் ம. கர்சன், செல்வன் அ. ஜனார்த்தன், செல்வி ம. சாருஷா, ஆகியோர் க.பொ.த உயர் தரத்தில் சித்தியெய்தியமைக்காக கௌரவிக்கப்பட்டதுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 142 புள்ளிகளை பெற்ற அ. அதிசயனும் கௌரவிக்கபட்டனர்.

வாழ்த்துரைகளை ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி. வேந்தன், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஷ்குமார், S.k.சந்துரு, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆகஸ்ரின், ஆகியோர் நிகழ்த்தினர்.

இந் நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள், நலன்விரும்பிகள், மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0