உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வீடொன்றில் தீ விபத்து; பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
47 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் 01 கிழக்கு கனகர் கிராமம் ஆதவன் மைதான வீதியில் பொங்கல் தினமான நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில் வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த தீ விபத்தில் வீட்டின் கூரை சேதமடைந்ததுடன் மற்றும் வீட்டின் அறையில் இருந்த பெருந்தொகையான தளபாடப் பொருட்கள் என்பன தீயில் கருகி சாம்பலாகியுள்ளது.

மேலும் உயிர் சேதம் ஒன்றும் இடம்பெறவில்லை.

குறித்த தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது சம்பவ தினமான நேற்று தைத்திருநாள் என்பதனால் வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டில் ஒரு சகோதரி மாத்திரமே இருந்துள்ளார். வீட்டின் உரிமையாளர்கள் வீடு திரும்பிய வேளை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதை கண்டதாக தெரிவித்தனர்.

பின்னர் பொதுமக்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக வீட்டின் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வங்காள விரிகுடாவில் சக்தி வாய்ந்த தாழமுக்கம்; வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை.!

வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்கு, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.…

77 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்களின் 90 படகுகளை கடலில் மூழ்கடிக்க தீர்மானம்.!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட சுமார் 90 இந்திய மீன்பிடிப் படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.…

69 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (23) ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி…

57 0 0
இலங்கை செய்திகள்

பிரமாணக் குறிப்புக்கு முரணான வடமாகாண அதிபர் நியமனம்.!

2023 டிசம்பர் முதல் வழங்கப்பட்ட அதிபர் நியமணத்தில் அரசியல் அழுத்தம் காரணமாகவும் பாராபட்சத்தினாலும் அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணாக அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் இன்று வரை…

88 0 0