உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளை அடியோடு புறக்கணித்தது தமிழரசு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி முடிவெடுத்துள்ளது.

இந்தத் தகவலை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்துக்கு இன்று விஐயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பொங்கல் நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என எமது கட்சி முடிவெடுத்துள்ளது.

இதற்குப் பிரதான காரணம் “பிரஜாசக்தி” எனும் பெயரில் அரச இயந்திரங்களுக்குச் சமாந்தரமாக தமது கட்சியைச் சார்ந்தவர்களை கொண்டு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாம் பல எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளோம். உள்ளூராட்சி சபைகள் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களைத் திசை மாற்றிக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் தமக்கு உள்ளூராட்சி அதிகாரங்கள் கிடைக்காத இடங்களில் இத்தகைய செயற்பாட்டை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

சட்ட ரீதியாக உள்ளூராட்சி சபைகள் முன்னெடுக்க வேண்டிய வேலைகளை வறுமை ஒழிப்பு எனும் பெயரில் நேரடியாக மத்திய அரசு செய்வதைச் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சுனாமி ஏற்பட்ட போது, வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுக்க அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முயன்றபோதே இதே ஜே.வி.பியினர்தான் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று அதற்கு எதிராகத் தடையுத்தரவைப் பெற்றனர்.

அதற்கு அவர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம், அரச அமைப்புக்கு சமாந்தரமாக எந்தவொரு அமைப்பையும் செயற்பட அனுமதிக்க முடியாது என்பதே.

சுனாமியால் மிக மோசமாகப் பாதிப்படைந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீள் கட்டுமானம் செய்ய முடியாமல் செய்தவர்கள் அவர்கள். அதே சட்ட அடிப்படையில் அவர்கள் இன்று அரசாங்க நிறுவனங்கள், உள்ளூராட்சி சபைகள் ஊடாக சட்ட ரீதியாக செய்ய வேண்டியதை அதற்குச் சமாந்தரமாக, தமது கட்சிக்காரர்களை உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கி அதன் ஊடாகச் செய்ய முயல்கின்றனர்.

அரச உதவிகள், நிவாரணங்கள், நிதிகளில் தங்களின் கட்சியை அவர்கள் வளர்க்கின்றனர். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர்கள் பாவித்த அதே சட்டக் கோட்பாட்டை உபயோகித்து அதனை நிறுத்த முயற்சி எடுப்போம். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக முதல் கட்டமாக ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வைப் புறக்கணித்துள்ளோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

21 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

68 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

35 0 0