உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வளைகுடாப் பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி முற்றாக நிறுத்தப்படும் : ஈரான் எச்சரிக்கை!

உலக செய்திகள் 16 நிமிடங்கள் முன்
56 பார்வைகள்

தெஹ்ரானுக்கு எதிரான மிகப்பெரிய நிதிசார் தாக்குதல்களாக ஈரானின் வர்த்தகப் பங்காளிகளை இலக்காகக் கொண்ட பொருளாதாரத் தடைகளை திங்களன்று (24) அமுல்படுத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.

அதேநேரம், “பொருளாதாரப் போர் தொடர்ந்தால்”, வளைகுடாப் பகுதியிலிருந்து அனைத்து எண்ணெய் ஏற்றுமதிகளையும் நிறுத்திவிடுவதாக ஈரான் பதிலுக்கு உறுதிபூண்டுள்ளது.

1979-ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஏறக்குறைய இடைவிடாத பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஒரு நாட்டின் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகளை அறிவிப்பதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் உள்ளூர் நேரப்படி திங்களன்று பிற்பகல் 1 மணிக்கு (EDT நேரம் – 1700 GMT) செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.

” அதிகாலையில் “economic D-Day” தொடங்குகிறது, இது ஒரு எதிரிக்கு (ஈரான்) எதிராக இதுவரை மேற்கொள்ளப்பட்டதிலேயே மிகப்பெரிய நிதிசார் தாக்குதலாகும்” என்று பெசென்ட் ஞாயிற்றுக்கிழமையன்று (23) ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ இதழில் வெளியான கருத்துக்கட்டுரை ஒன்றில் கூறியுள்ளார்.

போரிடும் நாடுகள் கடந்த சில வாரங்களாக ஒன்றுக்கொன்று எதிராக இராணுவத் தாக்குதல்களை நடத்தவில்லை.

அதேவேளையில், ஆறு மாதங்களாக நீடிக்கும் இமோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளிலும் அவை ஈடுபடவில்லை.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலோர் ஈரான் மற்றும் லெபனானைச் சேர்ந்தவர்கள்.

இத்தாக்குதல்கள் ஈரானின் வழக்கமான இராணுவத் திறனில் பெரும் பகுதியைச் சிதைத்து, அந்நாட்டிற்குப் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதோடு, ஈரானின் உயரிய தலைவரான அயதுல்லா அலி கமேனியையும் கொன்றுள்ளன.

ஆனால், ஈரான் தனது வளைகுடா அண்டை நாடுகளைத் தாக்குவதற்கும், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களை அச்சுறுத்துவதற்கும் போதுமான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் திறனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இது அந்த முக்கிய நீர்வழியில் கப்பல் போக்குவரத்தை ஏறக்குறைய முடக்கி, உலக எரிபொருள் விலைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது.

அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் முற்றிலுமாக அழிக்க இலக்கு வைத்துள்ள ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் சரியான நிலை என்னவென்பது இன்னும் அறியப்படவில்லை.

அதிக பணவீக்கம், வலுவிழந்து வரும் நாணயம், எரிசக்தி பற்றாக்குறை, பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆழமான கட்டமைப்பு பலவீனங்கள் ஆகியவற்றுடன் ஈரான் போரில் ஈடுபட்டது.

தற்போது சேதமடைந்த உள்கட்டமைப்பு, முடங்கிய வர்த்தகம், உற்பத்தி இழப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான செலவுகள் ஆகிய சவால்களை அது எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றதற்குப் பிறகு, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நேரடி அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறாத நிலையில், கட்டார், பாகிஸ்தான் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்க முயன்று வருகின்றன.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெஹ்ரானுக்கு வருகை தருவார் என்று ஈரான் கூறியது.

இருப்பினும், இது குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்தப் மோதலில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது;

அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த அச்சுறுத்தல் உள்ளிட்ட அண்மைய நிகழ்வுகள் குறித்தும் முனீர் விவாதிப்பார் என்று பாகிஸ்தான் அரசு வட்டாரத் தகவல் ஒன்று தெரிவித்தது.

போரின் போது ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மற்றும் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

இதில் 18 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

தென்னாபிரிக்க குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே சுட்டுக் கொ@லை!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 38 வயதான முன்னாள் உலக குத்துச்;சண்டை செம்பியன் சொலானி டெடே, அவரது வீட்டின் முன் வைத்து, துப்பாக்கி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை…

69 0 0
உலக செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் டோக்கியோ தலைநகர் உட்பட கிழக்கு காண்டோ (Kanto) பிராந்தியத்தில் ஜப்பனிய நேரப்படி அதிகாலை 2.00 மணியளவில் மெக்னிடியூட் அளவில் 5.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

40 0 0
உலக செய்திகள்

நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு.!

ஜப்பான் – டோக்கியோ நகருக்கு அருகில் இன்று (23) 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் குறைந்தது 37…

84 0 0
உலக செய்திகள்

நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச பிடியாணை பிறப்பிக்குமாறு துருக்கி கோரிக்கை!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதற்கான இன்டர்போலின் ‘சிவப்பு பிடியாணை’ வெளியிடக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல முயன்ற…

64 0 0