உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு போக முயற்சிக்க வேண்டாம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
36 பார்வைகள்

நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு போக முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்கட்சிகளுக்கு நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் உடுமாங்கண்டு நாபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் அதில் குறிப்பிடும்போது,
ஆட்சியில் இருக்கின்ற என்.பி.பி.அரசாங்கம், இழந்த பொருளாதாரம், சுகாதாரம், அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்களில் ஓரளவு சிரத்தை எடுத்து சேவையாற்றி வருகின்ற நிலையில், பிரதமர் ஹரிணிக்கு மற்றும் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசமப் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

எதிர்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள்
மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்களேயானால் அவர்கள் அரசாங்கத்தின் முற்போக்குத்தனமான செயற்பாடுகளுக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும். மாறாக எல்லா விடயங்களையும் எதிர்த்துக்கொண்டு குழப்பங்களை ஏற்படுத்த முனைவது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

அன்மைய அனர்த்த நிலைமைகளின்போது ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுத்துக்கொண்ட பிரயத்தனம் முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகங்கள் இலங்கையின் நாலாபுறங்களிலும் உதவி செய்ய முன்வந்தமை உட்பட நாபீர் பவுண்டேஷன் அமைப்பின் சமூக சேவை பிரிவின் ஊடாக வழமை போன்று பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வந்தமை என்பன காரணமாக தற்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றது.

இலங்கைத் திருநாடு எதிர்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை மக்கள் நலன் என்கிற கனவை எட்டுகின்ற அளவுக்கு முன்னேறி வருகின்றது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் தாங்கள் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக பல நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனை மக்கள் நன்கு அறிவார்கள்.

எனவே, நாட்டை குழப்புகின்ற, அபிவிருத்தி தடைகளை ஏற்படுத்துகின்ற, ஆட்சியை குழப்புகின்ற மற்றும் வங்குரோத்து அரசியலை செய்ய முனையாமல் அதனை கைவிட்டு விட்டு, அரசாங்கம் முன்னெடுக்கின்ற நல்ல விடயங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்களின் 90 படகுகளை கடலில் மூழ்கடிக்க தீர்மானம்.!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட சுமார் 90 இந்திய மீன்பிடிப் படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.…

66 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (23) ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி…

49 0 0
இலங்கை செய்திகள்

பிரமாணக் குறிப்புக்கு முரணான வடமாகாண அதிபர் நியமனம்.!

2023 டிசம்பர் முதல் வழங்கப்பட்ட அதிபர் நியமணத்தில் அரசியல் அழுத்தம் காரணமாகவும் பாராபட்சத்தினாலும் அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணாக அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் இன்று வரை…

85 0 0
இலங்கை செய்திகள்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்.!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் இன்று (23) முற்பகல் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரியான…

90 0 0