உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இறந்த நிலையில் கரையொதுங்கிய இராட்சத முதலை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மட்டக்களப்பு, காத்தான்குடி வாவிப் பாதையில் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இன்று வியாழக்கிழமை (15) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

கடந்த மாத இறுதியில் இந்த வாவியில் முதலாவது முதலை இறந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்றிரவு மற்றுமொரு முதலையும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட முதலை சுமார் 12 அடி நீளம் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குப் பலமுறை புகார் அளித்திருந்தனர்.

இந் நிலையில், அடுத்தடுத்து முதலைகள் உயிரிழப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரையொதுங்கியுள்ள இராட்சத முதலையைப் பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அவ்விடத்தில் திரண்டு வருகின்றனர்.

உயிரிழந்த முதலையை அப்புறப்படுத்துவதற்கும், அதன் இறப்புக்கான காரணத்தைக் கண்டறியவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

21 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

68 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

35 0 0