தினகரன் வாசகர்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.!
உலகத் தமிழர்களின் முதன்மையான பண்டிகையான தைப்பொங்கல் விழா இன்று (15) கொண்டாடப்படுகிறது.
உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி கூறும் வகையில் தைப்பொங்கல் பண்டிகை உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இயற்கையுடன் இணைந்த இந்தத் திருநாளானது விவசாயம், உழைப்பு, ஒற்றுமை மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில், தினகரன் இணையத்தளம் சார்பாக எமது இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.