உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கையில் 13 நாட்களில் 82 பேர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் இடம்பெற்ற 77 விபத்துக்களில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பெறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.

விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் ஏற்பட்டவை என்று தெரிவித்துள்ளார்.இலங்கையில் ஒரு நாளைக்கு மதுபோதையில் வாகனம் செலுத்தும் 500பேர் கைது செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்கு போதுமான அளவு மூச்சுப் பரிசோதனை கருவிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்த பின்னர் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண்பதற்கு நடமாடும் போதைப்பொருள் சோதனை அலகுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

21 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

67 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

34 0 0