உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாளை ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நாளை (15) மற்றும் நாளை மறுநாள் (16) மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை (15) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி, பங்கேற்கவுள்ளார்.சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ் நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் உட்பட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இன்னும் வீடுகளின்றி உள்ள 2,500 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு யாழ்ப்பாணம், சாவகச்சேரி வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெறும்.

மேலும், போதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சித் திட்டம் 16 ஆம் திகதி பிற்பகல் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

63 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

33 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

80 0 0