உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அமைச்சர் லால்காந்தவின் கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கே.டி. லால்காந்த, உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களிடம் கூறியதாவது:-
“மிகிந்தலை தலைமை விகாராதிபதி மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அமைச்சர் லால்காந்த விமர்சித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பை பற்றி மிகிந்தலை தேரருக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் உள்ளது. எனினும், மகா சங்கத்தினரைப் படுமோசமாக விமர்சிப்பது என்பது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தனது கருத்தை மீளப்பெற வேண்டும். மிகிந்தலை தேரர் உட்பட மகா சங்கத்தினரிடம் அமைச்சர் லால்காந்த மன்னிப்பு கோர வேண்டும்.” – என்றார்.

அதேவேளை, இந்த விவகாரத்துக்கு எதிராக அரசியல் களத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. சில பௌத்த தேரர்களும் அமைச்சர் லால்காந்தவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

64 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

34 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

81 0 0