உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

லங்கா ரைட்’ சைக்கிள் சவாரியில் வெற்றியாளருக்கு 600,000 ரூபா பரிசு.!

21 பார்வைகள்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘லங்கா ரைட்’ சைக்கிள் சவாரியில் இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய பரிசாக ஒட்டுமொத்த வெற்றியாளருக்கு 600,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.

இந்த சைக்கிளோட்டப் போட்டி எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் ஆரம்பமாகவுள்ளது.லங்கா ரைட்’ சைக்கிளோட்டப் போட்டியின் முதல் தினத்தில் கண்டி சென்று, இரண்டாவது தினத்தில் அநுராபுரத்தில் பூர்த்தி செய்யப்படுவதோடு இறுதி நாளான டிசம்பர் 18 ஆம் திகதி புத்தளம் வீதி ஊடாக டொரின்டன் பிளேஸ் சுதந்திர சதுக்கத்திற்கு அருகே நிறைவடையவுள்ளது.

இதில் முதல் நாள் போட்டி 105.5 கி.மீ. தூரம் கொண்டிருப்பதோடு இரண்டாவது நாள் போட்டி 135.5 கிலோமீற்றர் உடையது. அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரை இடம்பெறும் கடைசி நாள் போட்டி 208 கிலோமீற்றர் கொண்டது.இந்தப் போட்டியில் 26 அணிகள் பங்கேற்பதோடு ஓர் அணியில் குறைந்தது நான்கு மற்றும் அதிகபட்சம் ஆறு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.இதன்படி 150 இற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த பரிசுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் என 50 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளருக்கு 600,000 இலட்சம் ரூபா பரிசும் இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு 500,000 இலட்சமும் மூன்றாம் இடத்திற்கு 400,000 இலட்சமும் வழங்கப்படும்.

தவிர 4 மற்றும் 5 ஆம் இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே 300,000 மற்றும் 200,000 ரூபா பரிசு வழங்கப்படும். போட்டியில் முதல் 25 இடங்களை பிடிப்பவர்கள் வரை பணப் பரிசு அளிக்கப்படவுள்ளது.அத்துடன் விசேட பரிசுகளும் வழங்கப்படும். சிறந்த வேக ஓட்ட வீரர், மலையேற்ற வீரர் ஆகியோருக்கு தலா ஒரு இலட்சம் பணப்பரிசும் 23 வயதுக்கு உட்பட்ட சிறந்த இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டு 200,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும். சிறந்த அணிக்கும் 200,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படும்.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான நாளாந்த கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு 2,500 ரூபா வரையிலேயே கொடுப்பனவு வழங்கப்படும் நிலையில் இந்தப் போட்டியில் அந்தத் தொகை 5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0