உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் புதையல் அல்ல – அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் பழங்கால புதையல் அல்ல என தெரியவந்துள்ளது.கர்நாடகா மாநிலம் லக்குண்டி கிராமத்தில் வீடு கட்ட நிலைத்த தோண்டியபோது தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.இந்த செய்தி, மக்கள் மத்தியில் பழமையான பொக்கிஷம் கிடைத்தது என்ற ஆர்வத்தை அதிகரித்தது.

ஆனால், தொல்லியல் ஆய்வு நிறுவன (ASI) அதிகாரிகள், அந்த தங்கம் பழமையான பொக்கிஷமோ, புதையலோ அல்ல என்று விளக்கம் அளித்துள்ளனர்.அதிகாரிகள் கூறியதாவது:

கண்டெடுக்கப்பட்ட தங்கம், பழைய காலத்து அரசர் அல்லது கோவில் பொக்கிஷம் அல்ல. இது, சமீபத்திய காலத்தில் புதைக்கப்பட்ட தனிப்பட்ட நபரின் சொத்தாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

“கண்டுபிடிக்கப்பட்ட பல ஆபரணங்கள் உடைந்து கிடக்கின்றன. அவை வீட்டின் சமையலறை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், நம் முன்னோர்கள் கருவூலம் இல்லாததால் சமையலறை அடுப்பு பகுதியில் நகைகளை புதைத்து மறைத்து வைத்திருந்தனர். இது கடந்த காலத்தில் ஒரு நடைமுறையாக இருந்தது, இப்போது கண்டுபிடிக்கப்பட்டதும் அது போன்ற ஒரு ஒன்றாகவே தெரிகிறது”என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ASI விதிகளின்படி, பொக்கிஷம் எனக் கருதப்பட வேண்டுமெனில், அது 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்க வேண்டும். லக்குண்டியில் கண்டெடுக்கப்பட்ட தங்கம், அந்த அளவுகோலை பூர்த்தி செய்யவில்லை.

அதிகாரிகள் மேலும், “இது சட்ட ரீதியான விசாரணைக்கு உட்பட்டது. உரிமையாளர் யார் என்பதை பொலிஸார் மற்றும் வருவாய் துறை ஆராயும்” என தெரிவித்துள்ளனர்.லக்குண்டி, கர்நாடகாவில் பழமையான கோவில்கள் மற்றும் சின்னங்கள் காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அங்கு தங்கம் கண்டெடுக்கப்பட்டதால், அது பழைய பொக்கிஷம் என மக்கள் நம்பியிருந்தனர். ஆனால், ASI-யின் விளக்கம், அந்த நம்பிக்கையை முறியடித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0