உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் Source Code கேட்கும் இந்திய அரசு – புதிய பாதுகாப்பு திட்டம்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இந்திய அரசு, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களை, தங்களின் சோர்ஸ் கோடை (Source Code) அரசுக்கு வழங்க கட்டாயப்படுத்தும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.இது, நாட்டின் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.இதன் நோக்கம், சைபர் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் தகவல் கசிவு அபாயத்தை குறைத்தல் எனக் கூறப்படுகிறது.

சோர்ஸ் கோடு வழங்கப்பட்டால், அரசு செயலிகள் மற்றும் சாதனங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை நேரடியாக ஆய்வு செய்ய முடியும்.இதன் மூலம், தகவல் திருட்டு, ஹாக்கிங், உளவு நடவடிக்கைகள் போன்ற அபாயங்களை தடுக்கும் வாய்ப்பு உள்ளது.அரசு, “பயனர்களின் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு” ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது.

ஆனால், இது வணிக ரகசியங்களை பாதிக்கக்கூடும் என சில தொழில்நுட்ப நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.இந்தியாவில் விற்பனை செய்யும் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், சோர்ஸ் கோடு பகிர வேண்டிய நிலை உருவாகலாம்.

இது, சீன மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்.இதனால், பயனர்களுக்கு, பாதுகாப்பான சாதனங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால், தொழில்நுட்ப நிறுவனங்களின் தனியுரிமை மற்றும் வணிக சுதந்திரம் குறையக்கூடும்.இந்திய அரசு முன்மொழிந்துள்ள சோர்ஸ் கோடு விதி, டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கியமான முயற்சி. ஆனால், இது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய சவால்களை உருவாக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0