யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் நினைவுகூரப்பட்ட மலையக தியாகிகள் தினம்.!
மலையகத் தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் ‘மலையக தியாகிகள் தினம்’ நேற்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
1939 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பமாகி 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தின்போது, தமது மக்களுக்காக 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்தார். அவரின் நினைவு நாளிலேயே ஒட்டுமொத்த மலையக தியாகிகளும் நினைவுகூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





