உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரு மகன்கள் உட்பட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
37 பார்வைகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கறிஞர்கள் அவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரிய போதிலும் நீதிவான் அந்தக் கோரிக்கையை நிராகரித்து சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபர்களின் தரப்பில் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிவான் நிராகரித்தார்.

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனக்குச் சொந்தமானது என்று கூறப்படும் எத்தனால் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்குச் சதொச லொறியைப் பயன்படுத்தியுள்ளார்.

இதனால் அரசுக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

38 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

48 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் முருங்கன் பகுதியில் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பம்!

மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, Sennel Agro (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் “மாதோட்ட விதைகள்” எனும் புதிய விதை விற்பனை…

43 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கச் சதி!

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாகக் கல்முனை மாநகரில் ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’ போல ஒற்றுமையாக வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் குரல்களை நசுக்குவதற்குச் சில…

60 0 0