உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கொட்டகலையில் குடியிருப்பு பகுதியில் தீப்பரவல்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், அருகில் இருந்த மேலும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்த திம்புள்ள பத்தனை பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும் ஒரு வீடு முழுமையாக எரிந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உயிர்சேதங்களோ காயங்களோ எதுவும் ஏற்படவில்லை.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0