உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கடைசி ஆஷஸிலும் ஆஸி. அணி வெற்றி!

28 பார்வைகள்

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி தொடரை 4–1 என கைப்பற்றியது. இதன்மூலம் 2018 தொடக்கம் அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் கிண்ணத்தை தொடர்ந்து நான்காவது முறையாகவும் தக்கவைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 5ஆவது ஆஷஸ் போட்டியின் இறுதி நாளான நேற்று (08) அவுஸ்திரேலிய அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்ப வரிசை விக்கெட்டுகள் முக்கிய இடைவெளிகளில் பறிபோனபோதும் அந்த இலகுவான இலக்கை 31.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸி. அணியால் எட்ட முடிந்தது.

முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்காக 384 ஓட்டங்களை பெற்றதோடு தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 567 ஓட்டங்களைப் பெற்று 183 ஓட்டங்களால் முன்னிலையை எட்டியது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 342 ஓட்டங்களையே பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0