உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

எனக்கு எதிரான பிரேரணை படுதோல்வியடைவது உறுதி.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
38 பார்வைகள்

தனக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பிரேரணை படுதோல்வியடைவது உறுதி என்றும் அவர் கூறியுள்ளார்.

“இந்தப் பிரேரணை மூலம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மேலும் வாய்ப்பு கிட்டும்.” – என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டிக்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ள கல்வி விவகாரம் தொடர்பில் பிரதமர் மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

“எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களை அச்சிடும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும். சர்ச்சைக்குரிய பாடத்திட்டம் (தரம் 6 ஆங்கிலம்) எந்தவொரு மாணவருக்கும் வழங்கப்படவில்லை.

அச்சிடப்பட்ட மொடியூலின் அனைத்துப் பிரதிகளும் தற்போது முத்திரையிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன.” – என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தரம் ஆறு மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடிப்படையாகக்கொண்டு கல்வி அமைச்சுப் பதவியை வகிக்கும் பிரதமருக்கு எதிராக எதிரணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளன.

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டப்பட்ட நிலையில், இன்று பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமரிடம் ஊடகங்களால் வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “நம்பிக்கையில்லாப் பிரேரணை படுதோல்வியடைவது உறுதி. எனினும், இதன்மூலம் கல்வி பற்றி கதைப்பதற்கு வாய்ப்பு கிட்டும்.” – என்றும் அவர் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தனியார் மருத்துவமனைக்குச் செல்ல ஷிரந்தி ராஜபக்சவுக்கு அனுமதி மறுப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது என சிறைச்சாலை…

27 0 0
இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

73 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

78 0 0