உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதி மௌனம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
49 பார்வைகள்

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பது பற்றி இதுவரை வாய் திறந்து பேசவில்லை. இந்நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் இப்போது கூறுவதை எப்படி நம்புவது?”

இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் அந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களை இந்த அரசு ஒருபோதும் ஏமாற்றாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரசு இன்று வரை தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. முக்கியமான சில உறுதிமொழிகளாகக் கருதப்படும் காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கம், தேசிய இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வு ஆகிய உறுதிமொழிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

ஜனாதிபதி என்பவர் முப்படைகளின் தளபதி. அவரால் மிக விரைவாக காணிகளை விடுவிக்க முடியும். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கில் எவ்வளவு காணிகளை விடுவித்துள்ளார்? யாழ்ப்பாணத்தில் விரல் விட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனவா? இல்லை.

ஆகவே, அவர்கள் செய்யக்கூடிய விடயங்கள் என்று சொல்லப்படுபவை கூட இன்னும் செய்யப்படவில்லை.

இவ்வாறான நிலையில், தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் இப்போது கூறுவதை எப்படி நம்புவது?

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கடந்த ஒரு வருட காலத்தில் அவர்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாமல் செய்யப்படும் என்று அவர்கள் கூறினார்கள். அப்படியாயின் அந்த இடத்துக்கு என்ன வரப்போகின்றது? என்னத்தைக் கொண்டு அதை மாற்றீடு செய்யப் போகின்றார்கள்? அந்த இடத்தில் வரப்போவது சமஷ்டியா? அல்லது வேறுவிதமான அதிகாரப் பகிர்வா? அதை எவ்வாறு செய்யப்போகின்றார்கள்?

அவர்களது கட்சியில் இருக்கக்கூடிய செயலாளர் ரில்வின் சில்வாவோ அல்லது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ கூட தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பது பற்றி இதுவரை வாய் திறந்து பேசவில்லை.

இவர்களும் ஏனைய அரசுகளைப் போல் தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. ஆகவே, அவற்றை அவர்கள் மாற்ற வேண்டுமெனில் பல விடயங்களை அவர்கள் செய்ய வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தனியார் மருத்துவமனைக்குச் செல்ல ஷிரந்தி ராஜபக்சவுக்கு அனுமதி மறுப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது என சிறைச்சாலை…

27 0 0
இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

73 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

78 0 0