உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜெகதீஸ்வரன் எம்.பி!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
44 பார்வைகள்

வடக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமனற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திற்கு 2026 ஆம் ஆண்டு ஒரு அபிவிருத்தி ஆண்டாக இருக்கும். வடக்கு மாகாணத்திற்கு தேவையான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நாம் முழுமையாக பாடுபட்டு அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வர இருக்கின்றோம்.

கூடுதலான வேலைத் திட்டங்களை செய்ய இருக்கின்றோம். எங்களைப் பொறுத்த வரையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தென்பகுதியுடன் ஒப்பிடும் போது மிகவும் மோசமான நிலையில் வடபகுதி காணப்படுகின்றது.

எனவே பழைய அரசியல் கலாசாரத்தையோ அல்லது தோல்வியடைந்த அரசியல் கலாசாரத்தையோ கைவிட்டு ஆக்க பூர்வமான அரசியலை முன்னெடுத்து வடக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான வசதி வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவும், நேர்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கவும் கட்சி பேதமின்றி அனைவரையும் இரு கரம் கூப்பி வரவேற்று நிற்கின்றோம்.இதன் மூலம் வடக்கு மாகாணத்தை இலங்கையின் சிறந்த மாகாணமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

51 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

71 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

77 0 0