உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கந்தரோடை விகாரை என்ற பெயர்ப்பலகை அகற்றம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
44 பார்வைகள்

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைவாக கந்தரோடை விகாரை என்று பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது.

கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம் என்பதை மட்டுமே அடையாளப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்று சபையில் குறிப்பிடப்பட்ட நிலையில் குறித்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட பெயர்ப்பலகை இருந்த இடத்தில் ஒல்லாந்தர் காலத்திலே அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதியின் சிறப்பம்சங்கள் பற்றிய கல்வெட்டுப் பெயர்ப்பலகை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டது.

அதாவது, ஒல்லாந்தர் ஆக்கிரமிப்பு ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சமய நடவடிக்கைகளைக் கடந்து நிர்வாக, பொருளாதார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கியதன் தொல்லியல் சான்றாகவே சுன்னாகம் சந்தைக் கட்டடத் தொகுதி அமைந்துள்ளது. இந்த வரலாற்றை எமது எதிர்கால சந்ததிகளுக்கு ஊடுகடத்தும் விதமாக குறித்த பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

59 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

77 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0