உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

இலங்கை செய்திகள் 45 நிமிடங்கள் முன்
63 பார்வைகள்

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த வணக்கத்திற்குரிய இந்துராகாரே தம்மரத்தன தேரர், சிறைச்சாலையில் ஞானசார தேரரின் காவி உடை (சீவரம்) களையப்பட்டது தொடர்பாக, தேரர்கள் மற்றும் பொதுமக்கள் பலருடன் ஜூம் (Zoom) தொழில்நுட்பம் வழியே தீர்க்கமான கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அவ்வாறு காவி உடையை அகற்றுவதனால் ஒருவரின் துறவறம் இல்லாது போய்விடாது என வலியுறுத்திய அவர், இலங்கை சந்திக்கவிருந்த பல்வேறு சவால்கள் குறித்து ஞானசார தேரர் தனது புத்தகத்தில் முன்கூட்டியே பதிவு செய்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் தற்போதைய சிக்கல்களுக்கு பலர் கட்சி அரசியலின் குறுகிய பார்வையில் இருந்து அனைத்தையும் அணுகுவதே பிரதான காரணம் எனச் சுட்டிக்காட்டிய தேரர், சமூக ஊடகங்களில் சிலர் “அடுத்து சிறை ஆடை அணிவிக்கப்படப்போவது இந்துராகாரே தம்மரத்தன தேரருக்கே” எனக் கூறி வருவதாகக் குறிப்பிட்டதுடன், ஞானசார தேரருக்கு ஆசி வேண்டி நாடு முழுவதிலும் போதி பூஜைகளை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத, நடுநிலையான அமைப்பில் நடத்தப்படுவதாகவும், தாம் அனைத்து மதத்தினரின் உரிமைகளுக்காகவும் தோன்றுவதாகவும் தெரிவித்தார்.

ஹோமாகம நீதிமன்ற வழக்கு குறித்து தாம் பேசப்போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், 2019ஆம் ஆண்டு ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த காலத்தில் ஞானசார தேரருக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததால் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

ஆணைக்குழுவின் முடிவைக் காரணம் காட்டி அப் பாதுகாப்பை திடீரென விலக்கிக்கொள்ள முடியாது என வாதிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதியினால் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தவறானது என உயர்நீதிமன்றம் கூறவில்லை என்றும், அப்பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நடைமுறை முறையற்றது என்றே தீர்ப்பளித்ததாகவும் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், கடந்த காலங்களிலும் தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதிலும், நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் வேளைகளில் அவர்கள் காவி உடையுடனேயே அழைத்து வரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

51 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

76 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

79 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

68 0 0