உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். மீசாலை புகையிரதக் கடவையில் ஏற்படவிருந்த விபத்தை தடுத்த முச்சக்கர வண்டி சாரதிகள்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
77 பார்வைகள்

இன்று காலை மீசாலை சந்தி புகையிரதக் கடவையில் ஏற்படவிருந்த விபத்து ஒன்று முச்சக்கர வண்டி சாரதிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த பகுதியில் ரயில் வந்துகொண்டிருக்கும்போது கூலர் வாகனமொன்று புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளது. இதனை அவதானித்த மீசாலை தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டி சாரதிகள் உடனடியாக செயற்பட்டு கூலர் வாகனத்தை மறித்தனர். இதன்போது புகையிரதமும் அந்நேரத்தில் பயணித்துள்ளது. இதனால் அங்கு ஏற்படவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த கடவை கடந்த 7 நாட்களாக இயங்காத நிலையில் உள்ளது. இது தொடர்பாக புகையிரத திணைக்களத்திற்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக புகையிரத விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோன சம்பவங்கள் இடம்பெற்றும் புகையிரத திணைக்களம் இது குறித்து நடவடிக்கை எடுக்காமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

59 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

77 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0