உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மத்துகம பிரதேச சபைத் தலைவருக்கு பிணை.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
75 பார்வைகள்

களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேச சபையின் பெண் செயலாளரை தாக்கி காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்துகம பிரதேச சபைத் தலைவர் கசுன் முணசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.

மத்துகம பிரதேச சபைத் தலைவர் தனது அலுவலகத்திற்கு வந்து தன்னுடன் தகராறில் ஈடுபட்டு தன்னை தாக்கி காயப்படுத்தியதாக பெண் செயலாளர் மத்துகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பெண் செயலாளர் மத்துகம வெத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து மத்துகம பிரதேச சபைத் தலைவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து அவர் ஜனவரி 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

59 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

77 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0