உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அநுர அரசு தமிழர்களை ஏமாற்றாது; நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்படும்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு உறுதியுடன் செயற்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தமிழ் மக்களை இந்த அரசு ஒருபோதும் ஏமாற்றாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் பல அரசுகள் தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கிய போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல், உண்மையான மற்றும் நீடித்த அரசியல் தீர்வை வழங்குவதற்காக தற்போதைய அரசு பொறுப்புடன் செயற்படும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற அடிப்படை விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும்.

அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய ஒற்றுமையான நாட்டை கட்டியெழுப்புவதே இந்த அரசின் நோக்கமாகும்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நாட்டின் உள்நாட்டு விடயமாக இருந்தாலும், சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசு வெளிப்படையாகவும் பொறுப்புடனும் செயற்படுவதாக நம்பிக்கை அளிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களது நம்பிக்கையை மீட்டெடுப்பதே இந்த அரசின் முதன்மையான இலக்கு. அதற்காக அரசியல் ரீதியான நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்று உறுதியளிக்கின்றோம்.

வாக்குறுதி மட்டும் அல்ல, அதை நடைமுறையில் நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயற்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0