உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

டித்வா புயலால் இலங்கைக்குப் பேரிழப்புசர்வதேச நன்கொடையாளர்மாநாட்டை உடன் நடத்துங்கள்- அரசிடம் சஜித் மீண்டும் வலியுறுத்து!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
92 பார்வைகள்

“டித்வா சூறாவளியால் இலங்கைக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துங்கள்.”- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,

“டித்வா சூறாவளியால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு பெரும் இழப்பாகும். மிகப்பெரிய நிதி இழப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது.அரச தரப்பில் இருக்கும் பலர் என்ன விடயங்களைச் சொன்னாலும், இந்த இழப்பை எதிர்கொண்டு, அதைத் தாண்டி வேகமாக முன்னேறுவதற்குச் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்ட வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றது.

இது குறித்துப் பேசும்போது, அரசு இதில் அலட்சியமாக இருப்பது போலவே தெரிகிறது.உலக வங்கி நடத்திய மதிப்பீட்டின் பிரகாரம், உட்கட்டமைப்பு வசதிகளில் மட்டும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.எனினும், நமது நாடு இதுவரை பெற்றுள்ள நன்கொடைத் தொகை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களையே நெருங்கியுள்ளது.வாழ்வாதாரங்கள் சீரழிந்து போய், பல தொழில்கள் அழிந்து போயுள்ளன.

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுமாறு நாம் அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம். கூறிய விடயங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்துங்கள்.அவ்வாறே சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுங்கள். தாமதமின்றி உலகின் கவனத்தை நாட்டின் பக்கம் திருப்பிக்கொள்ளுங்கள்.சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

74 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

66 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

61 0 0