உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாடப் புத்தகத்தில் உள்ள விடயங்கள் தெரியவில்லையெனில் நாட்டு மக்கள் பற்றி இந்த அரசு எப்படி புரிந்துகொள்ளும்?

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
37 பார்வைகள்

“பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உடனடியாகப் பதவி விலக வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“நாட்டின் கலாசாரத்தை மறந்து மேற்குலகின் தேவைக்கேற்ப என்.பி.பி. அரசு தொடர்ந்து செயற்படுமானால் வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கக்கூடும்.” – என்றும் நாமல் எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாடப் புத்தகத்தில் உள்ள விடயங்கள் தெரியவில்லையெனில் நாட்டு மக்கள் பற்றி இந்த அரசு எப்படி புரிந்துகொள்ளும்?

கலாச்சாரம், ஆன்மீக பண்பாடு இன்றி நாடு ஏனோ, தானோ என்று சில மேற்குலக நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பயணிப்பது ஆபத்தானது.

ஏனெனில் நாடொன்றுக்கு (வெனிசுலா) வந்து விமானத்தில் ஜனாதிபதியைக் கொண்டு சென்றது போன்று எமது நாட்டிலும் நடக்கக்கூடும்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் எனக் கூறப்பட்டாலும் ஆளுங்கட்சியினருக்கு வேறுபட்ட விதத்தில் செயற்படும் நிலையே காணப்படுகின்றது.

அதேவேளை, பிரதமர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். கல்விக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு தொடர்பிலேயே அவர் பதவி விலக வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

69 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

70 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

61 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

52 0 0