உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரதமர் ஹரிணி அமரசூரியபதவி விலகப்போவதில்லை- ஆளுங்கட்சி உறுதிப்படுத்தல்!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
50 பார்வைகள்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலகப்போவதில்லை என்று ஆளுங்கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.“பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது பதவியில் இருந்து விலகப்போவதில்லை. அதற்குரிய எந்தவொரு தேவையும் தற்போது எழவில்லை.” – என்று ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.

கல்விக் கட்டமைப்பைச் சீர்குலைத்துள்ள பிரதமர் பதவி விலக வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஆளுங்கட்சி எம்.பியான தேவானந்த சுரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டுக்கு, மாணவர் சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்ககூடிய வகையில் எந்தவொரு கல்வி மறுசீரமைப்பும் இடம்பெறமாட்டாது. நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணை என்னவென்பது எமக்குப்  புரிகின்றது.அதற்கமையவே எமது செயற்பாடு இடம்பெறும். மக்களுக்குத்  துளியளவும் துரோகம் இழைக்காத வகையில் அரசின் பயணம் தொடரும்.

கல்வி மறுசீரமைப்பு என்பது காலத்தின் கட்டாய தேவையாகும். எனவே, இந்த விடயத்தில் குறுகிய நோக்கில் அரசியல் நடத்துவதற்கு எவரும் முற்படக்கூடாது.நாட்டுக்குப் பொருத்தமான கல்வி முறைமையை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் பிரதமரை இலக்கு வைத்து போலித்  தகவல்களைப் பரப்புவதற்குச் சிலர் முற்படுகின்றனர். ஆளுங்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும் முற்படுகின்றனர். ஆனால், எதிரணியின் கனவு பலிக்காது.பிரதமர் பதவி விலக வேண்டிய தேவை எழவில்லை. அவர் பதவி விலகவும் மாட்டார்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

55 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

46 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

45 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

52 0 0