உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் மலையக மாணவர்களுக்கு கருத்தரங்கு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
67 பார்வைகள்

யாழ். வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் நுவரெலியா புசல்லாவை இந்து தேசிய கல்லூரி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு, குறித்த பாடசாலையில் இன்றையதினம் நடைபெற்று வருகிறது.

டித்வா புயல் காரணமாக மலையகத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. அந்தவகையில் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மாணவர்கள் வீட்டில் இருந்து சுய கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களுக்கு முக்கிய 5 பாடங்களை உள்ளடக்கிய கற்றல் கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கம்பளை கல்வி வலய பிரதிப் பணிப்பாளர் விஜயேந்திரன், வெண்கரம் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன், வெண்கரம் அமைப்பினர், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி…

53 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

52 0 0
இலங்கை செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.!

கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்…

30 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

54 0 0