உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஜோன்ஸ்டனும் அவரது இளைய மகனும் விளக்கமறியலில்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
23 பார்வைகள்

சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தைத் துஷ்பிரயோகம் செய்தனர் என்று கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று வத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தை உத்தியோகபூர்வமற்ற முறையில் பயன்படுத்தியமை மற்றும் அதன் மூலம் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மற்றொரு மகனான ஜொஹான் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் போக்குவரத்துப் பிரிவின் முன்னாள் முகாமையாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0