உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டெழும்; கடமையேற்ற கையோடு சூளுரைத்த சாமர எம்.பி.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
68 பார்வைகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயம் மீண்டெழும் என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் தயநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட அவர், இன்று கட்சித் தலைமையகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜே.வி.பியானது 3 உறுப்பினர்களை வைத்துக்கொண்டுதான் ஆட்சியைப் பிடித்தது. ஏற்ற, இறக்கங்களை அந்தக் கட்சி சந்தித்தது. இன்று அந்தக் கட்சிக்கு 159 எம்.பிக்கள் இருக்கின்றனர்.

எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நிச்சயம் மீண்டெழும். அதை நோக்கி எமது பயணம் தொடரும். அதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

கட்சியை விட்டுச் சென்றவர்கள் நிச்சயம் மீண்டும் வருவார்கள். பல வருடங்கள் கட்சித் தலைமையகம் பக்கம் வராதவர்கள்கூட இன்று வந்தார்கள். இதுதான் முன்னோக்கி செல்வதற்கான மாற்றம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

46 0 0
இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

59 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வள நிலையங்களை நிறுவக் கோரிய ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84% கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,…

64 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” நிறைவு.!

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக…

62 0 0