நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஆரம்பமான இந்தக் கையெழுத்திடும் நடவடிக்கையில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பிரேரணையில் கையெழுத்திட்டனர்.
நாளை வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









