உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” நிறைவு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
187 பார்வைகள்

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழா கல்லூரி அதிபர் திருமதி. வாசுகி சுதாகர் அவர்களின் தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு மங்கள விளக்கேற்றல், தேவாரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.

வரவேற்புரை, வரவேற்பு நடனம் மற்றும் தலைமையுரையைத் தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேறின.

நிகழ்வின் சிறப்பம்சமாக, இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தினால் வரலாற்றில் முதன்முறையாக “இந்துவின் வித்தகக் குரிசில்” எனும் சிறப்பு விருது அறிமுகப்படுத்தப்பட்டு, வாழ்நாள் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது ஏற்புரையும் இடம்பெற்றது.

இவ்விழாவில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் துரை மனோகரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அத்துடன் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் திரு. சு. முரளிதரன் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றார்.

மேலும், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் திருமதி. அபிராமி கைலாசபிள்ளை, முன்னாள் அதிபர் கலாநிதி. த. முத்துக்குமாரசாமி, ஓய்வுநிலை பணிப்பாளர் கலாநிதி. உ.நவரத்தினம், சிரேஷ்ட மெல்லிசைப் பாடகர் கலாபூஷணம் வெ. முத்தழகு, இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி. க. இரகுபரன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் திரு. சந்திரமௌலீசன் லலீசன், சைவநெறிப் பயிற்சி மையத் தலைவர் திரு. செ. நவந்தீகுமார், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. ம. சுதர்ஷினி, ஊடகவியலாளர் திரு. ராதா மேத்தா மற்றும் இரத்மலானை அதிபர் திரு. சோமசுந்தரம் முரளி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் போது “தமிழ்த் தீபம்” சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, முத்தமிழ் விழா சிறப்புக் காணொளி ஒளிபரப்பு, குழு இசை, பல்லியம், சத்தியவான் சாவித்திரி வில்லுப்பாட்டு, கிராமிய நடனம் மற்றும் இலக்கிய நாடகம் ஆகிய மாணவர்களின் கலைப் படைப்புகளும் இடம்பெற்றன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு, விருந்தினர்கள் மற்றும் மன்றச் செயற்குழு உறுப்பினர்கள் கௌரவிப்பு, நன்றியுரையைத் தொடர்ந்து கல்லூரிக் கீதத்துடன் விழா நிறைவுற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0