உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நெடுந்தீவில் பாம்பு தீண்டலுக்கு இலக்கான பெண்! விரைந்து செயற்பட்ட விமானப்படை.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
74 பார்வைகள்

நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டிய பெண்ணொருவர் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவர் இன்றையதினம்(5.1.2025) பாம்பு கடிக்கு இலக்காகிய நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்வழி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நிலை காணப்பட்டது.இந்நிலையில் இதுகுறித்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் ஆகியவற்றுக்கு தகவல் வழங்கப்பட்டது.

அந்தவகையில் விரைந்து செயற்பட்ட மேற்குறித்த தரப்பினர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்று, விமானப்படையின் உதவியுடன் அவரை விமானம் மூலமாக பலாலி விமான நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.குறித்த பெண் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

46 0 0
இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

59 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வள நிலையங்களை நிறுவக் கோரிய ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84% கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,…

64 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” நிறைவு.!

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக…

62 0 0