உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெண் பொலிஸ் அதிகாரியுடன் சிக்கிய உதவி பொலிஸ் அத்தியகட்சகர்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
110 பார்வைகள்

லஞ்சம் பெற்று குற்றச்சாட்டில் ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளை இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.அதற்கமைய நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

லஞ்சம் பெற்றதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வீட்டிலிருந்து பணிக்கு வர அனுமதிக்க, மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதி பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.

அந்த அனுமதியை வழங்குவதற்கு கையடக்கத் தொலைபேசி உட்பட 72,000 ரூபாய் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில், நுவரெலியா பொலிஸ் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

அதற்கமைவாக நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் விசாரணைக்கு அமைவாக பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்ட், கடமை நேரத்தில் அலுவலகத்தினுள் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

46 0 0
இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

59 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வள நிலையங்களை நிறுவக் கோரிய ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84% கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,…

64 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” நிறைவு.!

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக…

62 0 0