உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பதவியேற்பு!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
123 பார்வைகள்

திருகோணமலை மாவட்ட மேலதிக புதிய அரசாங்க அதிபராக (காணி) ஜெயகௌரி ஸ்ரீபதி பதவியேற்றுள்ளார்.இவர் இன்று (05) மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தம்பலகாமம் பிரதேச செயலாளராக பணியாற்றிய நிலையில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக விசேட மத அனுஷ்டானங்களுடன் கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.இதில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார ,மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பொறுப்பேற்ற நிலையில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றவுள்ளார்.2014ல் இருந்து 2025 வரையான காலப்பகுதியில் தம்பலகாமம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஜெ.ஸ்ரீபதி இலங்கை நிருவாக சேவை தரம் ஒன்றை சேர்ந்தவராவார்.

இதற்கு முன்னர் குச்சவெளி உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நியமனம் மூலமான சிறப்பான சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கடமையினை பொறுப்பேற்றதன் பின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

48 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வள நிலையங்களை நிறுவக் கோரிய ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84% கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,…

60 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” நிறைவு.!

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக…

58 0 0
இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

64 0 0