உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உலக சந்தையில் வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்க விலை! இலங்கையிலும் திடீர் மாற்றம்

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
110 பார்வைகள்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை தொடர்ந்து தங்கம், வெள்ளி மற்றும் உலோகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, இன்று (05) காலை உலக சந்தைகளில் ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 1.8 சதவீதம் அதிகரித்து $4,408 (£3,282) ஆக உயர்ந்துள்ளதுடன், வெள்ளி விலையும் 3.5% உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் 2025 இல் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச அளவை எட்டியதாக கூறப்படுகிறது.உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்படி, இலங்கையிலும் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

கடந்த 02ஆம் திகதி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாவாக இருந்த நிலையில் இன்று (05) 3,000 ரூபாய் அதிகரித்துள்ளது.அந்த வகையில் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 360,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.அதற்கமைய, 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 332,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 314,900 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வள நிலையங்களை நிறுவக் கோரிய ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84% கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,…

60 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” நிறைவு.!

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக…

58 0 0
இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

64 0 0