உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் மதுபோதையில் அரச பேருந்தை செலுத்திய சாரதி கைது.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
115 பார்வைகள்

ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று (4) மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைதானது யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் இடையிலான சேவையை முன்னெடுக்கும் வழித்தடம் 777 இலக்க பேருந்தை செலுத்திச் சென்ற சாரதியே குறித்த சம்பவத்தின் போது கைதாகியுள்ளார்.

அதிகளவான பயணிகளுடன் நேற்று மாலை 4 மணியளவில் குறித்த அரச பேருந்து அதிவேகத்தில் பயணிப்பதை அவதானித்த ஊர்காவற்றுறை போக்குவரத்து பொறுப்பதிகாரி சமன் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் பேருந்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது சாரதியிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இருந்திருக்கவில்லை எனவும் அவர் மது அருந்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சாரதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை மற்றும் மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட காரணங்களுக்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

48 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வள நிலையங்களை நிறுவக் கோரிய ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84% கணினிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,…

60 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரியின் “முத்தமிழ் விழா 2026” நிறைவு.!

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றத்தின் (2025/26) ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்றைய தினம் (07.10.2026, புதன்கிழமை) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக…

58 0 0
இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

64 0 0