உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கை – 2 கோடி தண்டம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
28 பார்வைகள்

வடமாகாணத்தில் 2025ஆம் ஆண்டு வர்த்தகர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபாரத்தில் ஈடுபட்டமைக்காக 2 கோடியே 48 இலட்சத்து 40 ஆயிரத்து ஐந்நூறு ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்தார்.

குறிப்பாக வடமாகாணத்தில் 3174 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 3062 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டே குறித்த தண்டம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் வவுனியா மாவட்டத்தில் 619 சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் 617 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக 66 இலட்சத்து 94 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் 818 சுற்றிவளைப்புக்களும், 801 வழக்குகளும் பதிவு செயயப்பட்டு 77 இலட்சத்து 24 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கிளிநொச்சி மாவட்டத்தில் 608 சுற்றிவளைப்புக்களும், 633 வழக்குகளும் பதிவு செயயப்பட்டு 49 இலட்சத்து 89 ஆயிரத்து ஐந்நூறு ரூபாவும் தண்டப்பணமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 591 சுற்றிவளைப்புக்களும், 532 வழக்குகளும் பதிவு செயயப்பட்டு 31 இலட்சத்து 62 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், மன்னார் மாவட்டத்தில் 538 சுற்றிவளைப்புக்களும் 479 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு 22 இலட்சத்து 71 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கீரி சம்பா உட்பட அரிசி விற்பனை தொடர்பாக வடமாகாணத்தில் விசேட சுற்றுவளைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0