உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திஸ்ஸ விகாரையை இடித்தழிக்க இடமளியோம்; அங்குள்ள காணிகளையும் விடுவிக்க முடியாது.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
40 பார்வைகள்

யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்ற ஒருபோதும் இடமளியோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

அதேவேளை, திஸ்ஸ விகாரையைச் சுற்றியுள்ள காணிகள் விகாரைக்குச் சொந்தமானவை என்றும், அந்தக் காணிகளை விடுவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் விகாரை அமைந்துள்ள காணியைத் தவிர ஏனைய காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்று காணி உரிமையாளர்களுடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடலின்போது யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் உறுதியளித்திருந்தார். எனினும், இது தங்கள் போராட்டத்தை மலினப்படுத்தித் தங்களை ஏமாற்றும் அரசின் திட்டம் என்றும், காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் நேற்றுமுன்தினம் தையிட்டியில் நடைபெற்ற போராட்டத்தின்போது காணி உரிமையாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.

அதேவேளை, மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதில் எதற்காக கட்டம் கட்டமான நடவடிக்கை இடம்பெற வேண்டும்? என்று கேள்வி எழுப்பியிருந்த நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ, திஸ்ஸ விகாரை அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட மிகச் சிறிய பகுதியை எடுத்துக்கொண்டு ஏனைய பகுதிகள் அனைத்தும் ஒரே தடவையில் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜானக வக்கும்புர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை என்பது தமிழ் மக்களுக்கும், தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தெரியாதா? தையிட்டி திஸ்ஸ விகாரையில் எவரும் கைவைக்க முடியாது. அதை அகற்ற ஒருபோதும் இடமளியோம். திஸ்ஸ விகாரையைச் சுற்றியுள்ள காணிகள் விகாரைக்குச் சொந்தமானவை. அந்தக் காணிகளை அரசு விடுவிக்கக்கூடாது.

அதேவேளை, தையிட்டி விகாரை விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள விகாராதிபதிகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். அவர்கள் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் கொ**லை.!

காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக…

61 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம்.!

இலங்கை, இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…

77 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

59 0 0