உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 43 நிமிடங்கள் முன்
34 பார்வைகள்

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் சித்தும் சங்கல்ப என்ற 21 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று சுற்றுலாவுக்காக காலிப் பகுதிக்கு உந்துருளியில் சென்று கொண்டிருந்த போதே, மாணவர் ஒருவர் உந்துருளியிலிருந்து தவறி விழுந்து, எதிரே வந்த பாடசாலை வேன் ஒன்றில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்குள்ளான மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர் தனது 5 நண்பர்களுடன் உந்துருளியில் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, உந்துருளி வீதியின் வலதுபுறமாகச் சரிந்து விழுந்து, எதிர்த்திசையில் இருந்து வந்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த தருணத்தில் காலி வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பின்னர் பொலிஸார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

57 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

68 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

58 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

73 0 0