உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

இலங்கை செய்திகள் 55 நிமிடங்கள் முன்
57 பார்வைகள்

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.

இந்தப் பங்கேற்பு தர்கா நகரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், அந்நகரிலிருந்து ஒரு கராத்தே அணி சர்வதேச மட்டத்திலான போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். இது தர்கா நகர் மக்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஒரு சிறப்பான சாதனையாகும்.

இந்தச் சாதனையின் பின்னணியில் பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் அவர்களின் தொடர்ச்சியான பயிற்சியும் அர்ப்பணிப்பான வழிகாட்டுதலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதேவேளை, தமது பிள்ளைகளை கராத்தே விளையாட்டில் ஈடுபடுத்தி, அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கு தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் வழங்கிய பெற்றோர்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.

இந்தச் சிறப்பான சந்தர்ப்பத்தில், தர்கா நகர மக்கள் சார்பில் அணியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு, வெற்றிகளையும் பெருமைக்குரிய பெறுபேறுகளையும் பெற்று, இலங்கையின் தேசியக் கொடியை சர்வதேச அரங்கில் உயர்த்திப் பிடிக்க எமது வீரர்களுக்கு வாழ்த்துகள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

33 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

68 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

58 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

73 0 0